சிறுவர்கள் தொடர்பில் சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை
டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுவர்நல வைத்திய நிபுணர் பிரதீப் நவபாலசூரியன் தெரிவித்தார்.
இந்நிலையில் ,சூரியனின் செய்தி முகாமையாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறுவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் பிரதீப் நவபாலசூரியன் தெரிவித்தார்.