இலங்கையில் இளைஞர்களை கடத்திய பொலிஸார்
பதுளையில் இரண்டு இளைஞர்களை கடத்தி உடமைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளும் மற்றுமொரு வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களால் பதுளை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பதுளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது பதுளை எகொடவெள- பிங்கராவ பகுதியைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் டீயான்வெள வீதி ,பதுளையைச் சேர்ந்த ஒருவரும் பதுளை குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் குருணாகலை பொலிஸ் பிரிவில் பயிற்சி கான்ஸ்டபிளாக பணி புரிந்ததோடு கடந்தாண்டு டிசெம்பர் 31ஆம் திகதியுடன், விடுமுறையில் வீடு திரும்பி மீண்டும் கடமைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.
குறித்த, சந்தேகநபர்களை கைதுசெய்யும் போது, அவர்களிடம் இருந்து, ஒரு ஜோடி கைவிலங்கும் 4 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.