எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்
எரிபொருள் வரிசையில் நின்றிருந்த மேலும் ஒரு நபர் சுகயீனம் ஏற்பட்டு இன்று உயிரிழநதுள்ளார்.
கம்பளை புஸ்ஸெல்லாவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
71 வயதுடைய நபர் மாரடடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.