5 வயது மகளை மாடியில் இருந்து வீசிய கொடூர தாய்

கர்நாடகாவின் பெங்களூருவில் 5 வயது மகளை, 4 ஆவது மாடியில் இருந்து தரையில் வீசி கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.
சம்பங்கி ராமநகர் பகுதியை சேர்ந்த சோமேஸ்வர் என்பவருக்கு வாய் பேசமுடியாத, காது கேட்காத ஐந்து வயது மகள் உள்ள நிலையில், அவரது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பெண், தனது மகளை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே தூக்கி வீசி எறிந்து, தானும் கீழே குதிக்க முயன்றுள்ளார்.
அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றிய நிலையில், கீழே விழுந்த சிறுமி உயிரிழந்தார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், தாயை போலீசார் கைது செய்தனர்.
Related Post

முச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம்
கண்டியில் முச்சக்கரவண்டி சாரதிகள், சட்டவிரோத மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, நாட்டிலுள்ள [...]

தப்பியோடிய 09 கைதிகளில் 06 பேர் கைது
பதுளை தல்தெனை போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 09 கைதிகளில் [...]

எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
எதாவதொரு ஊழியர் அல்லது தொழிற்சங்கம் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட மற்றும் ஒழுக்காற்று [...]