மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் மாயம்
கண்டி, ஜனசவிகம பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
நீராட வந்த நால்வரில் இருவர் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல்லகெலே பிரதேசத்தில் வசிக்கும் 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களே காணாமல் போயுள்ளனர்.
அவர்களைக் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.