யாழில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய குடும்பத் தலைவர் மரணம்

கைத்தொலைப்பேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய குடும்பத்தலைவர், தவறான முடிவெடுத்துள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
“காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கிலிட்டு சடலமாக காணப்பட்டார். எப்போதும் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். வேறு பிரச்சினைகள் அவருக்கு இருக்கவில்லை” என்று மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த மாத இறுதியில் இளவாலையைச் சேர்ந்த இளைஞன் இதே போன்ற காரணத்தினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

கிளிநொச்சியில் 33 வயது நபரால் தாயான 16 வயது மாணவி
சுவிஸ்லாந்தைச் சேர்ந்த 33 வயதான குடும்பஸ்தர் ஒருவர் 16 வயது கிளிநொச்சி சிறுமியை [...]

இந்தோனேசியாவில் நில நடுக்கம் – 20 பேர் பலி, 300 பேர் காயம்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட [...]

யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை அடித்து துன்புறுத்தும் வீடியோ
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை தோட்டம் ஒன்றில் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கும் [...]