பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
பிரான்ஸ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்தி (SMS) ஒன்று தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த குறுஞ்செய்தியில், மக்களுக்கு பொதி ஒன்று வந்துள்ளதாகவும், பொதியினை பெற்றுக்கொள்ள கீழுள்ள இணைப்பினை அழுத்தவும் என எழுதப்பட்டுள்ளது.
அந்த குறுஞ்செய்தியில் ஒரு இணைப்பும் அனுப்படுவதாகவும், அந்த இணைப்பை அழுத்துவதனூடாக செயலி (App) ஒன்று பதிவேற்றப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த செயலி பதிவிரக்கம் செய்யப்பட்ட பின்னர் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Android பயனாளர்களிடம் செயலி App தரவிறக்கவும், iPhone பயனாளர்களிடம் உங்களது Apple ID தரவுகளையும் அது கோருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதிய இலக்கத்தில் இருந்து வரும் இதுபோன்ற குறுந்தகவல்களை உடனடியாக அழிக்கும் படியும், எவ்வித தகவல்களையும் பகிரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பிரான்சில் 200,000 குறுந்தகவல்கள் அனுப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த குறுந்தகவல்கள் சீன இணைய ஹக்கர்களால் அனுப்பப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இணையவழி திருட்டுக்களை கண்காணிக்கும் நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
தொலைபேசிகளின் நடத்தையைக் கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டுள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மோசடியாளர்களினால் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்கள் அல்லது வயோதிபர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.