சாந்தனின் பூதவுடல் இன்று இலங்கைக்கு
சாந்தனின் பூதவுடன் இன்று காலை 11 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் விடுவிக்கப்பட்ட நிலையில் ஒன்றரை வருடங்கள் திருச்சி முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில்,
உடல்நல குறைவினால் சென்றை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
அவருடைய பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக ஆவணங்கள் நேற்றைய தினம் தயார் செய்யப்பட்டு தமிழகத்திற்கு அனுப்பபட்டுள்ளதாகவும்,
இன்றைய தினம் காலை 11 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பூதவுடல் எடுத்துவரப்பட்டு கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் பின்னர்,
உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்படும் என கூறப்படுகின்றது.