யாழ் பண்ணைப் பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்த முச்சக்கரவண்டி

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்கு அருகில் பாய்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முச்சக்கரவண்டியில் சாரதி உள்ளிட்ட ஐவர் பயணித்த நிலையில், அதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
மூன்று பெண்களும் ஒரு குழந்தையுமே விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இளைஞர்கள்
ஆலய வீதியில் கண்டெடுக்கப்பட்ட தொலைபேசி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.. மண்ணுக்குள் புதை உண்டு இருந்த [...]

பெண் யாசகரிடம் இருந்து குழந்தையை பறித்து சென்ற கும்பல்
பெண் யாசகரிடம் இருந்து சுமார் ஒன்றரை வயது அடங்கிய கைக்குழந்தையை மூவரடங்கிய குழுவொன்று [...]

ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்ற மாணவன் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம்
அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த [...]