நாளை முதல் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
நாளை (30) நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி குறிப்பிட்டார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க சேவைகள் என பல சேவைகள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சந்தன சூரியஆராச்சி குறிப்பிட்டார்.
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்திற்குள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
Related Post

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது
இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர முயற்சித்த 47 [...]

அகதியாக சென்ற இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தமிழக பொலிஸ்காரர்
இலங்கை பெண் அகதி வீட்டிற்குள் இரவில் நுழைந்த போலீஸ்காரரை தற்காலிக பணியிடை நீக்கம் [...]

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்
எரிபொருள் வரிசையில் நின்றிருந்த மேலும் ஒரு நபர் சுகயீனம் ஏற்பட்டு இன்று உயிரிழநதுள்ளார். [...]