Day: July 3, 2023

கழிவுநீர் வடிகாலில் மீட்கப்பட்ட எட்டுமாத கருகழிவுநீர் வடிகாலில் மீட்கப்பட்ட எட்டுமாத கரு

கண்டி தேசிய வைத்தியசாலை அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து எட்டு மாத மனித கரு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலை கர்ப்பிணிப் பிரிவுக்கு அருகில் உள்ள வடிகால் அமைப்பை சுத்தம் செய்ய சென்ற தொழிலாளி ஒருவர் அதை பார்த்து [...]

காதலியை வீட்டுக்குள் நுழைந்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்காதலியை வீட்டுக்குள் நுழைந்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிடை நிறுத்தப்பட்டுள்ளார். யுவதியை உதைத்து காயப்படுத்திய கான்ஸ்டபிள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபரின் காதலி என கூறப்படும் யுவதி ஒருவரே [...]

அடுத்த 36 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைஅடுத்த 36 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. [...]

கிளி பளையில் கோர விபத்து – ஒருவர் படுகாயம்கிளி பளையில் கோர விபத்து – ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலீஸ் பிரிவிற்க்குட்பட்ட புதுக்காடு சந்தியை அண்மித்த. ஏ9 வீதியில் யாழ்நோக்கி விற்பனை பொருட்களுடன் பயனித்துக் கொண்டிருந்த சிறிய கப் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் [...]

மலையகத்தில் தொடரும் மழை – மரக்கறிகளின் விலை உயர்வுமலையகத்தில் தொடரும் மழை – மரக்கறிகளின் விலை உயர்வு

மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அந்தவகையில் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான ஆபத்து [...]

20 வயது யுவதி நீரில் மூழ்கி மாயம்20 வயது யுவதி நீரில் மூழ்கி மாயம்

அத்தனகலு ஓயா நீர்மானிக்கு அருகில் நீராடச் சென்ற 20 வயது யுவதி ஒருவர் செல்பி எடுக்கச் சென்ற போது வழுக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நிட்டம்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போன யுவதி, கொழும்பு குணசிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து [...]

மன்னார் கட்டுக்கரையில் மீன் பிடி வள்ளம் நீரில் மூழ்கி ஒருவர் பலிமன்னார் கட்டுக்கரையில் மீன் பிடி வள்ளம் நீரில் மூழ்கி ஒருவர் பலி

மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(2) படகு (வள்ளம்) ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போன நிலையில் ஒரு மீனவர் சடலம் இன்று திங்கட்கிழமை(3) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். -சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த [...]

மலையக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்புமலையக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதாக [...]

முல்லைத்தீவில் கடும் போக்குவாதிகள் விகாரைகளுக்கு சென்று பார்வைமுல்லைத்தீவில் கடும் போக்குவாதிகள் விகாரைகளுக்கு சென்று பார்வை

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கடும்போக்கு சிந்தனைவாதிகள் எனப்படுவர்கள் உள்ளிடவர்கள் பயணம் மேற்கொண்டு குரூந்தூர்மலை விகாரைக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று (02) நடைபெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா [...]

நீர்ப் பம்பியை திருடிச் செல்ல முற்பட்ட இளைஞன் அடித்துக் கொலைநீர்ப் பம்பியை திருடிச் செல்ல முற்பட்ட இளைஞன் அடித்துக் கொலை

சூரியவெவ – வெவேகம பகுதியில் திருடச் சென்ற இளைஞரொருவர், பிரதேச மக்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார். குறித்த சந்தேகநபர் 2ஆம் திகதி அதிகாலை மேலும் இருவருடன் காணியொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த நீர்ப் பம்பியை திருடிச் செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் [...]

தொலைக்காட்சி வேலைக்காக இளைஞனுடன் தகாத உறவு – வெளியான நிர்வாண புகைப்படங்கள்தொலைக்காட்சி வேலைக்காக இளைஞனுடன் தகாத உறவு – வெளியான நிர்வாண புகைப்படங்கள்

கொழும்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக கடையாற்றிய பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தொகுப்பாளராக வேலை வாங்கித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த இளைஞனுடன் உறவு வைத்திருந்த பெண் வேலை கிடைந்தவுடன் உறவை கைவிட்டுள்ளார். [...]

மூன்று மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கைமூன்று மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ [...]

திருகோணமலையில் துப்பாக்கி சூடு – இருவர் படுகாயம்திருகோணமலையில் துப்பாக்கி சூடு – இருவர் படுகாயம்

திருகோணமலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் படுகாயம் அடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று [...]

மழை நிலைமை தொடரும்மழை நிலைமை தொடரும்

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, [...]