திருகோணமலையில் துப்பாக்கி சூடு – இருவர் படுகாயம்

திருகோணமலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் படுகாயம் அடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (03) அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் குச்சவெளி வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.அஸ்மி (17வயது) ஐ.அஸ்கான் (21வயது) ஆகிய இருவருமே காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

அடுத்த வாரம் முதல் மின்வெட்டு நேரத்தில் மாற்றம்
செயலிழந்த நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரத்தை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் [...]

யாழில் 23 வயதான யுவதி தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் [...]

அருட்தந்தை டிஜே அம்பலவாணர் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள்
தென்னிந்திய திருச்சபையின் யாழ்மறை மாவட்ட இரண்டாம் ஆயர் அருட்தந்தை டிஜே அம்பலவாணர் அவர்களின் [...]