QR முறை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் முடிவுக்கு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

QR குறியீடு எரிபொருள் விநியோக முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மேற்கோள்காட்டி நியூஸ்ஃபர்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய எரிபொருள் கடவுச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறையானது மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்து செய்யப்படும் என்றும்,

சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ந்து எரிபொருளை வழங்க முடியும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கடந்த வாரம் தெரிவித்தார்.