Day: June 1, 2022

வவுனியாவில் மாயமான இளைஞர்வவுனியாவில் மாயமான இளைஞர்

வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருமன்காடு பகுதியை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றையதினம் (31-05-2022) அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே [...]

யாழில் காணாமல் போன 3 வயது சிறுமி காட்டுக்குள்ளிருந்து மீட்புயாழில் காணாமல் போன 3 வயது சிறுமி காட்டுக்குள்ளிருந்து மீட்பு

மிருசுவில் வடக்கு பகுதியில் இன்று மாலை காணாமல் போன சிறுமி வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் உள்ள [...]

உச்சம் தொட்ட மதுபானங்களின் விலை – புதிய விலைப்பட்டியல்உச்சம் தொட்ட மதுபானங்களின் விலை – புதிய விலைப்பட்டியல்

இன்று முதல் அமுலாகும் வகையில் சகல மதுபான போத்தல்களின் விலைகளும் உயர்த்தப்படுவதாக மதுபான உற்பத்தியாளர்கள் அறிவித்திருக்கின்றனர். வற்வரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக இந்த விலை அதிகரிப்பு அமைந்திருக்கின்றது. புதிய விலை விபரம் கீழே.. [...]

சிக்ரெட்டின் விலை அதிகரிப்புசிக்ரெட்டின் விலை அதிகரிப்பு

சிக்ரெட்டின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு மதுபானங்களின் விலையை அதிகரிக்க மதுபான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக வெட் வரி அதிகரிப்பு [...]

புல் வெட்டுவதற்காக சென்ற நபர் சடலமாக மீட்புபுல் வெட்டுவதற்காக சென்ற நபர் சடலமாக மீட்பு

புல் வெட்டுவதற்காக சென்ற குடும்பஸ்தரை முதலை தாக்கியதில் உயிர் இழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களியோடை ஆற்றின் ஓரத்தில் கடந்த திங்கட்கிழமை (30) காலை தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது [...]

குடைபிடித்து பரீட்சை எழுதிய மாணவர்கள்குடைபிடித்து பரீட்சை எழுதிய மாணவர்கள்

சீரற்ற காலநிலை காரணமாக இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றையதினம் பெய்த கனமழையின் காரணமாக சில தேர்வு நிலையங்களில் மழைநீர் தேங்கி நின்றது போன்ற பல புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. [...]

தனது தந்தையுடன் இணைந்து கணவரை கொலை செய்த பெண்தனது தந்தையுடன் இணைந்து கணவரை கொலை செய்த பெண்

தனது தந்தையுடன் இணைந்து பொல்லால் தாக்கி கணவரை கொலை செய்த மனைவிக்கு 7 வருட சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன், அவரின் தந்தைக்கு பத்து வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையு,ம் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதித்து [...]

அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடுஅத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. தற்போது 12 முதல் 20 வரையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர் சமின் விஜேசிங்க [...]

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சி அறிவிப்புஅரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சி அறிவிப்பு

எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிக்கவும் மாற்றுப் போக்குவரத்து முறைகளை பயன்படுத்துவதற்கு வசதியாகவும், அரச அலுவலகங்களுக்கு சமூகமளிக்கையில் சீருடைக்கு பதிலாக வசதியான ஆடையில் கடமைக்கு சமூகமளிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த [...]

உலகிலே முதன்முறையாக குரங்கம்மையால் ஏற்பட்ட பலிஉலகிலே முதன்முறையாக குரங்கம்மையால் ஏற்பட்ட பலி

நைஜீரியாவில் குரங்கு காய்ச்சலின் முதல் வழக்கு இந்த ஆண்டு பதிவாகியுள்ளது. இதைத்தான் டாக்டர் ஐமி அலங்கோ, சுகாதாரத் தலைவர், சங்குரு, காங்கோ. நாட்டில் 465 பேர் குரங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள காங்கோவில் [...]

பாடகர் கிருஷ்ணகுமார் மேடையில் உயிரிழப்புபாடகர் கிருஷ்ணகுமார் மேடையில் உயிரிழப்பு

இந்தியத் திரையுலகின் பலமொழி பாடகர்களில் ஒருவரான கேகே என்று அழைக்கப்படுபவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே திடீரென மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு [...]

யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவுயாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு

யாழ்ப்பாண பொதுநூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு, வன்முறைக் குழுவொன்றினால் நூலகம் தீயூட்டப்பட்டது. யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் [...]

யாழில் 4 கோடி பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைதுயாழில் 4 கோடி பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைது

இலங்கை சுங்க திணைக்களத்தின் யாழ்.காங்கேசன்துறை பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தலைமன்னார் கடற்பரப்பில் சந்தேக நபர்கள் மூவருடன் தங்கம் [...]

மேலும் மூன்று பேர் தமிழகத்தில் தஞ்சம்மேலும் மூன்று பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தமிழகத்தின் தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கடற்கரையை இன்று (1) அதிகாலை சென்றடைந்துள்ளனர். அவர்களை மீட்ட மெரைன் பொலிசார் ராமேஸ்வரம் மெரைன் பொலிஸ் [...]

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கைவானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்றும் அடுத்த சில நாட்களிலும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் [...]