யாழில் நீரில் மூழ்கி முதியவர் பலி
யாழ்.தொண்டமனாறு இறந்தவரின் அஸ்த்தியை ஆற்றில் கரைக்க சென்றிருந்த வயோதிபர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றார்.
சம்பவத்தில் வவுனியா – பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த செ.நாகரத்தினம் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கரவெட்டியில் இடம்பெற்ற மரண சடங்கிற்கு வந்துள்ளார்.
பின்னர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இறந்தவரின் அஸ்த்தியை கரைப்பதற்காக தொண்டமனாறு ஆற்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அஸ்த்தியை கரைத்த பின்னர்
ஆற்றில் அனைவரும் நீராடியுள்ளனர். இதன்போது குறித்த முதியவரும் நீராடிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் மீட்டு முதலுதவி கொடுத்தபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.