ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
அமைச்சரவை கூட்டம் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க நேற்று பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இது இடம்பெற்றது.
அத்தியாவசிய சேவைகள், எரிபொருள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.