கடவுச்சீட்டு வரிசையில் குழந்தை பிரசவித்த தாய்
பத்தரமுல்லை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் இன்று (07) அதிகாலை குழந்தையை பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த தாயை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க அங்கிருந்தவர்கள் நடவடிக்கை எடுத்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.