அம்பாறையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (04) இரவு மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கோமாரி பிரதேசத்தைச் சேர்ந்த பெரியதம்பி சற்குணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உமரி பகுதி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சம்பவதினமான நேற்று திங்கள் இரவு 6.30 மணி அளவில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை கண்டுள்ள பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசேதனைக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.