யாழில் ஒன்றரை வயது குழந்தை நீரில் விழுந்து பலி
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – பொன்னாலை பகுதியில் ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை ஒன்று நீர் நிரம்பிய குளியல் வாளியில் விழுந்து பலியாகியுள்ளது.
இன்று முற்பகல் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
குறித்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.