செயலிழந்த நீர் மின் நிலையங்கள் – அதிகரிக்கப்போகும் மின்வெட்டு நேரம்

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முழுமையான பங்களிப்பு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர்மின் உற்பத்தி சிலவற்றின் தொழிற்பாடுகள் செயலிழந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
லக்ஷபான, நவலக்ஷபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் கெனியோன் ஆகிய 5 நீர்மின் நிலையங்களின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன.
இதன்காரணமாக குறித்த நீர்மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்க பெறும் 300 மெகாவொட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று அதிகாலை முதல் கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஹட்டன், கொட்டகலை உள்ளிட்ட பிரதேசங்களிலும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Post

இரகசியத்தை வெளிப்படுத்திய சஜித் பிரேமதாச
தம்மை நாட்டின் பிரதமராக நியமித்து தனது அரசியல் வாழ்க்கையை அழிக்க ஸ்ரீலங்கா பொதுஜன [...]

ஜனவரி 1ம் திகதி முதல் வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்
புதிய வாகனப் பதிவுகளுக்காக வாகன இலக்கத் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் [...]

நீதி நிர்வாகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறையாக நிதியளிக்கப்பட வேண்டும்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 வது அமர்வில் விடயம் 8 இன் [...]