அதிக மழை வீழ்ச்சி – நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் உள்ள நீர் போசன பிரதேசங்களுக்கு நேற்று (02) இரவு முதல் பதிவாகி வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சார சபை பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நீரேந்தும் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கெனியோன் நீர்த்தேக்கத்தில் இரண்டும் வான் கதவுகள் (03) இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளன.
நோர்ட்டன் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்ந்து வான்பாய்ந்து வருகின்றன.
இதே நேரம் காசல்ரி, மவுசாகலை, லக்ஸபான நவலக்ஸபான, பொல்பிட்டி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்ட மிக வேகமாக உயர்ந்து வருவதாகவும்.
குறித்த நீர்த்தேக்கங்களின் நீரினை கொண்டு உச்ச அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் மின்சாரசபை பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.