தொடரும் கன மழை – 127 பேர் பலி, 22 லட்சம் பேர் பாதிப்பு
அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
அம்மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 28 மாவட்டங்களை சேர்ந்த 22 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் விமானப்படை மூலம் குடிநீர், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இன் நிலையில் சில்ச்சாரில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன் வெள்ளம் பாதித்த பகுதிகளை ரப்பர் படகில் சென்று அம்மாநில முதலமைச்சர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.