மட்டு நகரில் எரிபொருள் வரிசையை வாடகைக்கு விட்ட இளைஞன்

மட்டு நகரில் எரிபொருள் வரிசையை வாடகைக்கு விட்ட இளைஞன் தொடர்பிலான தகவலொன்று சமூக வலைத்தளங்களில் ப்ரவி வருகின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் எரிபாருள் தட்டுப்பாடு காரணமாக பல துறைகளும் ஸ்தம்பிதமடைந்து வருகின்றன.
இந்த நிலையில் எரிபொருளுக்காக இரவு பகலாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இவ்வாறாறன நிலையில் மட்டு நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் வரிசைக்காக காத்தருந்த இளைஞர் ஒருவர் தான் நின்ற இடத்தை வாடகைக்கு வழங்கவுள்ளதாக கதிரை ஒன்றில் விளம்பரத்தை காட்சி படுத்தியுள்ளார்.
அத்துடன் தேவையானவர்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனின் இந்த செயல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Related Post

கிளி பாரதிபுரத்தில் பால் குடித்த 13 சிறார்கள் வைத்தியசாலையில்
குடித்த பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, பாரதிபுரம் [...]

எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம்
எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு [...]

எரிபொருள் வரிசையில் அடிதடி – நால்வர் வைத்தியசாலையில்
கற்பிட்டி – எத்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் [...]