யாழ். பருத்தித்துறையில் கடலுக்கு சென்ற 4 மீனவர்களை காணவில்லை

யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியிலிருந்து நேற்று கடற்றொழிலுக்கு சென்றிருந்த மீனவர்கள் 4 பேர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் கடலுக்குச் சென்று இன்று காலை 10 மணியளவில் கரை திரும்ப வேண்டியவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.
இதனால் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் ஊடாக தேடுவதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக
பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதேவேளை எரிபொருள் இல்லாமையால் தாம் அவர்களை தேடமுடியாத நிலையில் உள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Related Post

யாழில் டெங்கு, சுவாச தொற்று மற்றும் உண்ணிக் காய்ச்சல் பரவலும் தீவிரம்
தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நோய்க்கு மேலதிகமாக வேறு நோய்களும் பரவுகிறது என தெரிவித்த [...]

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. அமைச்சரவை [...]

ரம்புக்கனை கலவரத்தில் உயிரிழந்த நபரின் இறுதிக்கிரியை இன்று
ரம்புக்கனை யில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது உயிரிழந்த 42 வயதான சமிந்த லக்ஷானின் [...]