பழங்களில் விஷம் கலந்து ரஷ்ய வீரர்களிற்கு கொடுத்த உக்ரைன் விவசாயிகள்
உக்ரைன் விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த செர்ரிப் பழங்களை விஷமாக்கி ரஷ்யாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் உக்ரைன் (Melitopol) மெலிடோபோல் நகரத்தைக் கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் விஷம் தோய்ந்த செர்ரிகளை அபகரித்துச் சென்றனர்.
இது ரஷ்ய வீரர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பரிசு என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
செர்ரி பழங்களை உண்ட ரஷ்ய வீரர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் மெலிட்டோபோல் நகரில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பல ஆயிரக்கணக்கான டன்கள் செர்ரிப் பழங்கள் விளைகின்றமை குறிப்பிடத்தக்கது.