களனி ஆற்றில் வீசப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு


சிலாபம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறுவனின் சடலம், வத்தளை – கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரால் களனி ஆற்றில் வீசப்பட்டது எனக் கூறப்படும் 5 வயது சிறுவனுயடையதாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாயால் வீசப்பட்ட சிறுவனின் சடலம் கரையொதுங்கியது

கடந்த 15ஆம் திகதி வத்தளை – ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை வீசிவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முற்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிறுவனின் தாய் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *