புகையிரதத்தில் ஏற முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து மரணம்

மாத்தறை புகையிரத நிலையத்தில் நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணிக்க ஆரம்பமான சாகரிகா புகையிரதத்தில் ஏற முற்பட்ட இளைஞன் புகையிரதத்திற்கும் நடைமேடைக்கும் இடையில் தவறி விழுந்துள்ளார்.
புகையிரதத்திற்கும் புகையிரத நடைமேடைக்கும் இடையில் சிக்கிய இளைஞனை வெளியே எடுப்பதற்கு சுமார் ஒரு மணிநேரம் எடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திக்வெல்ல வெவ்ருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதான ரூசர விதானகே என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாத்தறையில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் இளைஞன், பணி முடிந்து வீட்டுக்குச் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Related Post

மூவரின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயம்
பெண் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை தடுக்க முயற்சித்த கான்ஸ்டபிள் ஒருவர் [...]

எங்கள் பிள்ளைகளை கொலை செய்தவர்கள் யார்?
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் [...]

கனடாவில் மூச்சு விடும் அதிசய மரம்
கனேடிய நகரம் ஒன்றில் மூச்சு விடும் மரம் ஒன்றைக் காட்டும் வீடியோ ஒன்று [...]