திருகோணமலையில் கோர விபத்து – 4 பேர் படுகாயம்
திருகோணமலை ஹபரணை பிரதான வீதியில் வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (18) அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டகளப்புக்குச் சென்ற வேன் ஒன்றும் திருகோணமலையிலிருந்து குருணாகலைக்குச் சென்ற லொறியொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளானோர் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.
வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்படநால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.