வடகொரியாவை தாக்கும் மற்றொரு புதிய நோய்
வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக குடல் தொற்று நோய்யும் பரவத் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஹெஜு நகரில் உள்ள மக்கள் கடுமையான குடல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடுமையான குடல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஹேஜுவு-க்கு மருந்துகளை அனுப்பி வைத்து, பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி தொற்று நோய் பரிசோதனைகளை தீவிரப்படுத்த அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.