மன்னார் வைத்தியசாலையினுள் கத்திக்குத்து
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (13) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் நொச்சிக்குளம் பகுதியில் இரு சகோதரர்கள் வாள்வெட்டு தாக்குதலில் பலியாகிய நிலையில் நள்ளிரவில் நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கத்திகுத்துக்கு இழக்காகியுள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.