வாரத்தில் ஒரு நாள் மட்டும் எரிபொருள் விநியோகம்


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்கள் விபரங்களை பதிவு செய்வதன் மூலம் உத்தரவாதத்துடன் வாரத்தில் ஒரு நாள் எரிபொருள் பெறக்கூடிய முறைமை ஒன்றை உருவாக்க உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ஜூலை முதலாவது வாரத்தில் இந்த அமைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் எரிசக்தி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கையில் தடையற்ற மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகம் இருக்கும் வரை, எரிபொருள் பாதை முகாமைத்துவம் சாத்தியமற்றதாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்கிறது, ஆனால் சில நுகர்வோர்

தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்காக ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலாக பயன்படுத்துவதற்கான எரிபொருளை சேமித்துக் கொள்கின்றனர். எனவே நாட்டில் எரிபொருள் நெருக்கடி உருவாவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *