யாழ் நயினை நாகபூசணி அம்மன் மகோற்சவம் வரும் 29ம் திகதி
யாழ்ப்பாணம்-வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு – நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இத்திருவிழா 15 தினங்களில் மஹோற்சவம் இடம்பெறவுள்ள நிலையில் இவ் விசேட கூட்டம் இடம்பெற்றது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த விசேட கூட்டத்தில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பரிபாலன சபையினர், கடற்படையினர், பொலிஸார், வேலணை பிரதேச செயலர் மற்றும் துறைசார் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.