முல்லைத்தீவில் 12 வயது பாடசாலை மாணவியை காணவில்லை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாற்கு கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 12 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 04.06.2022 அன்று இரவுநித்திரை கொள்ள சென்ற சிறுமி அதிகாலையில் வீட்டில் காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த பணம், தந்தையின் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ள நிலையில் தன்னை தேடவேண்டாம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த மாணவி டிக்டக்கில் அண்மையில் தொடர்பில் இருந்ததாகவும் ஹட்டன் பகுதியினை சேர்ந்த நண்பன் ஒருவரை காதலித்துள்ளதாகவும் டிக்டக் தகவலின் படி மாணவி காதலனை தேடி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை மாணவியின் தொடர்பு ஒருதடவை கிடைத்துள்ளதாகவும் மேற்கொண்டு தொடர்பு கிடைக்கவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
12 அகவையுடைய மாணவி இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை கிராமத்தில் அச்சத்தினை ஏற்றபடுத்தியுள்ளதுடன் ஏற்கனவே பேசு பொருளாகா காணப்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் இவ்வாறான சம்பவங்கள் தங்களை மேலும் கவலைகொள்ள செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்
பிள்ளைகள் மீது பெற்றோர்கள் சரியான அக்கறையுடனும் கண்டிப்புடனும் செயற்படவில்லை என்பதை இவ்வாறான சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.