வங்கதேச தீ விபத்தில் மேலும் 49 உயிரிழப்பு
வங்கதேசத்தின் முக்கிய துறைமுக பகுதியான சிட்டகாங் அருகே கப்பல் கண்டெய்னர் டிப்போவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மேலும் 49 பேர் பலியாகியுள்ளனர். 450-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தீக்காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டெய்னர் டிப்போ வங்க தேசத்தின் சிட்டகாங் அருகேயுள்ள சீதகுண்டா பகுதியில் உள்ள கண்டெய்னர் டிப்போவில் நேற்று முன் தினம் இரவு 9.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
ஆனால் இந்த கண்டெய்னர்கள் சிலவற்றில் வேதிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
கன்டெய்னர் டிப்போவின் இயக்குநர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.