காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் பலி
நெல்லை பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நிறுத்திவைக்கப்பட்ட காருக்குள் விளையாடச்சென்ற 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் நித்திஷா (7), நித்திஷ் (4) மற்றும் கபிலன் (4) ஆகிய குழந்தைகள் விளையாடச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், வெகு நேரமாகியும் குழந்தைகளை காணவில்லை என பெற்றோர் தேடியபோது, மூன்று பேரும் காருக்குள் மயங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று பேரையும் கார் கதவு திறந்து மீட்கப்பட்டது.
இதில் இரண்டு குழந்தைகள் மூச்சு திணறலால் அங்கேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒரு குழந்தைக்கு உயிர் இருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அந்த குழந்தையும் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டது.
இறந்த குழந்தைகளில் நித்திஷா மற்றும் நித்திஷ் ஆகியோர் உடன் பிறந்த அக்கா, தம்பி ஆவர்.
ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.