சுமந்திரன் வீட்டில் இராணுவ சிப்பாய் தற்கொலை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (04) காலை அவர் தனது கடமை நேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வெள்ளவத்தையில் சுமந்திரன் எம்.பி.யின் வீட்டுக்கு அருகிலுள்ள காணியொன்றில் இராணுவ சிப்பாய் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் வலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

துண்டாக்கப்பட்ட மின்சார சபை ஊழியரின் கைகள்
மொறட்டுவை பிரதேசத்தில் நபர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து மின் பொறியியலாளரின் கைகள் [...]

ஜப்பானை தாக்கிய சுனாமி – விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
ஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்தில் அலறியடித்து [...]

முல்லைத்தீவில் உழவு இயந்திரம் விபத்து – குடும்பஸ்தர் மரணம்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டுப்பகுதியில் வயல் உழவிற்காக உழவு இயந்திரத்தினை [...]