பாராளுமன்ற உறுப்பினரின் மகனுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல்
பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வேதஆராய்ச்சியின் மகனுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வீரகெட்டிய – பெதிகம பகுதியில் பொலிஸ் அதிகாரிகளை பாராளுமன்ற உறுப்பினரின் மகன் ரவிந்துவும், அவரது மனைவியும் இணைந்து பேசும் காணொளியே இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையின் ஊடாக காரில் குளிர்சாதன பெட்டியை எடுத்துச் செல்ல முற்பட்ட போதே இந்த முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.