கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 4 வயது சிறுமி பலி

கிளிநொச்சி பகுதியில் வீட்டில் இருந்த ‘பிளக்கில்’ கைபிடியற்ற ‘ஸ்குரு ட்ரைவரை’ (screwdriver) செலுத்திய 4 வயதுச் சிறுமி மின்தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியில் கடந்த 30ம் திகதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்ரன் ஜினேசன் ஜினேஜினி என்ற 4 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.
ஸ்குரு ட்ரைவர் ஊடக மின் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமியின் உடல் கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

21 ஆக மாறிய 22 ஆவது திருத்தம்
இலங்கையின் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் பெயரை 21ஆவது திருத்தம் [...]

கிளிநொச்சியில் பிரசவத்தின் போது 4 சிசுக்கள் மரணம்
கடந்த ஒரு வாரத்துக்குள் நான்கு சிசு மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கர்ப்பையும் [...]

பெண் உள்ளிட்ட 3 பேர் அதிரடியாக கைது
போதைப் பொருள் வியாபாரம் மூலம் பெற்ற பெருமளவு பணம் மற்றும் போதைப் பொருட்களுடன் [...]