இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு – 14 பேர் பலி, 37 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்று மாலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் 22 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் உள்ள மசார்-இ-ஷெரீப் நகரத்தில் பேருந்து ஒன்றினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
குறித்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த தாக்குதல்களை இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related Post

தபால் முலம் வாக்களிக்கும் விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்
இன்று (20) முதல் எதிர்வரும் 23ம் திகதி வரையில் உறுதிப்படுத்தப்பட்ட அஞ்சல் மூல [...]

இன்று முதல் அதிகரிக்கும் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கட்டணம்
நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்கள் மற்றும் [...]

இலங்கைக்கு 25 மில்லியன் டொலர்களை வழங்கும் அவுஸ்திரேலியா
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் [...]