விதிமுறைகளை மீறிய 4 எரிபொருள் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்
வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை மீறி கலன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகித்தமை மற்றும் கையிருப்பை விநியோகிக்காமல் வைத்திருந்தமை காரணமாக நான்கு நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகு தன்மையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்றிரவு முதல் இடைநிறுத்தியுள்ளது.
ஏனைய வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்வதற்காக காவல்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தற்காலிக அனுமதிப்பத்திரமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.