யாழில் மாமரத்தில் கொப்பு வெட்டியவர் உயிரிழப்பு


யாழ்.மானிப்பாய் – சங்குவேலி பகுதியில் மாமரத்தில் கொப்பு வெட்டுவதற்கு ஏறியவர் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பகர் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நா.நகுலேந்திரன் (வயது48) என்ற 6 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

உயரமான மாமரத்தில் ஏறி கொப்பு வெட்டிக் கொண்டிருக்கும்போது அவர் நின்றுகொண்டிருந்த கொப்பு முறிந்து கீழே விழுந்துள்ளது.

கீழே விழுந்து சுயநினைவற்று கிடந்த குடும்பஸ்த்தரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *