பிரதமர் பதவியை ஏற்கும் ரணில் விக்கிரமசிங்க
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்பார். என தெற்கு அரசியலில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு பல கட்சிகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி கோரியிருந்த நிலையில்,
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு எந்தவொரு கட்சித் தலைவரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்றய தினம் இரவு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ – ரணில் விக்கிரமசிங்க இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதனடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்கலாம். என கூறப்படுகின்றது.
அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நிமால் ஸ்ரீபால டீ சில்வா, விஜயதாஸ ராஜபக்ஸ, டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்களை பரிந்துரைய செய்துள்ளனர்.
எனினும் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணகூடிய ஒருவரை பிரதமராக தேர்வு செய்வதற்கு தேசிய ஜனநாயக முன்னணி தீர்மானித்துள்ளதாகவும்
தெற்கு அரசியலில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.