நாடு முழுவதும் இன்று 5 மணி நேர மின்வெட்டு
நாடு முழுவதும் இன்று (12) 5 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
பகலில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் இரவில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளுக்கு காலை 8.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஐந்து மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
MNOXYZ வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் 8.20 மணி வரையான காலப்பகுதியிலும், CC வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் 9.20 மணி வரையான காலப்பகுதியிலும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.