இலங்கையிலும் நிலநடுக்கம் – மக்கள் அச்சப்பட வேண்டாம்
புத்தள பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மதிப்பு ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி உள்ளது.
புத்தளவுக்கு மேலதிகமாக வெல்லவாய மற்றும் ஹந்தபானகல பிரதேசங்களிலும் இந்த நில அதிர்வு நிலை உணரப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலநடுக்க நிலைமை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சப்பட வேண்டாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.