யாழ் வடமராட்சியில் வேறொரு நபருடன் இணைந்து கணவனை கொன்று புதைத்த மனைவி

யாழ்.வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தில் மனைவியே கணவனை கொலை செய்து புதைத்தமை விசாரணைகளில் தொியவந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் கூறியுள்ளனர்.
வெற்றிலைக்கேணி – முள்ளியான் என்ற முகவரியைச் சேர்ந்த தாசன் சிவஞானம் (வயது 42) என்ற நபர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் அது குறித்த தகவல் நேற்று வெளியாகியிருந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மருதங்கேணி பொலிஸார், முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் பிறிதொரு நபரும் இணைந்து கொலை செய்து புதைத்தமையினை கண்டறிந்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதியின் பின்னர் சடலம் அகழ்ந்தெடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related Post

400 அடி ஆழமான கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் – கண்ணீருடன் தாயார்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் விழுந்த 8 வயது [...]

நீக்கம் செய்யப்பட்ட பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி கொடுப்பனவு
தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுரத்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க [...]

கோதுமை மாவின் விலை 35 ரூபாயால் அதிகரிப்பு
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 35 ரூபாயால் அதிகரித்துள்ளது. கோதுமை மா [...]