ஞானாக்கா வீடு மற்றும் ஹோட்டல் தீக்கிரை
இன்று அதிகாலை ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்கா என அழைக்கப்படும் பெண்ணின் வீடு மற்றும் ஹோட்டல் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டல் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக தீ வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது அங்கு ஒருவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.