கண்ணீர் புகைக் குண்டு அபாயமானது – மருத்துவ சங்கம் எச்சரிக்கை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பயன்படுத்தும் கண்ணீர் புகைக் குண்டுகளில் உள்ளடங்கியுள்ள இரசாயனங்கள் சுவாசக் கோளாறு, கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துவதாக இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது.

கண்ணீர்ப்புகையில் உள்ள இரசாயனங்கள் சுவாசக் கோளாறுகள், கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன.

அரசாங்கத்தின் அவசர நிலை பிரகடனம் குறித்து இலங்கை மருத்துவச் சங்கம் மிகவும் கரிசனை கொண்டுள்ளது.

பொதுமக்களின் குரலுக்கு செவி சாய்த்து, நமது தாய் நாட்டின் நலனுக்காக விரைவான தீர்வு நோக்கிச் செயற்படுமாறு அதிகாரத்தில் உள்ள தரப்பினரை நாம் கேட்டுக்கொள்கிறோம் எனவும் இலங்கை மருத்துவச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.