யாழில் கிணற்றுக்குள் விழுந்த 11 வயது சிறுமி உயிரிழப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை சரவணை பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த சிறுமி ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிறுமி ஏற்கனவே நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
ரூபன் ஜதுசா வயது (11) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் பக்கத்து வீட்டுக்கு சென்ற நேரம் சிறுமி நீராடுவதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார். இதன்போதே கால் இடறி விழுந்து இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்ணுற்ற அயலவர் சிறுமியின் கிணற்றுக்குள் இருந்து மீட்டு ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று இருந்தனர். சிறுமியின் உடலை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related Post

யாழில் 30 வருடங்களாக காத்திருக்கும் சாந்தனின் தாயார் உருக்கம்
எனது ஆசை எல்லாம் எனது பிள்ளை நல்லபடியாக என்னிடம் வந்து சேரவேண்டும் .அவருடன் [...]

கொழும்பில் அதிரிகரித்து வரும் சிறுநீரகக் கடத்தல்
பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பாரியளவிலான சிறுநீரகக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் சர்ச்சைக்குரிய [...]

மதுபானசாலைகள் 7 நாட்களுக்கு பூட்டு
எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் [...]