யாழ்.பருத்தித்துறையில் வீதியால் நடந்து சென்ற நபர் மயங்கி விழுந்து மரணம்
யாழ்.பருத்தித்துறை – கிராமக்கோடு பகுதியில் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மயங்கி விழுந்த முதியர் நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் முதியவர் உயிரிழந்துள்ளார். அதேசமயம் உயிரிழந்த முதியவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகின்றது.