பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானம்

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானம் எடுக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ நேற்று சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறானதொன்று நடந்தால், புதிய அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கான வேட்பு மனுக்களை கட்சித் தலைமைக் குழுவொன்று கோரினால், மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர வேறு யாரையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிறுத்தாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவே பிரதமர் பதவியை வகிக்க வேண்டும் என்பது கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்படுத்திய இணக்கப்பாடு எனவும், அந்த மக்கள் ஆணையைத் தவிர வேறு யாரையும் நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Related Post

இலங்கையில் மீண்டும் கொவிட் அபாயம்
நாட்டில் பதிவாகியுள்ள கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், நாளாந்தம் குறைந்த எண்ணிக்கையிலான [...]

இன்றைய மின்வெட்டு விபரங்கள்
இன்றைய தினம் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுகிறது. இலங்கை [...]

யாழில் அயல் வீட்டாருடன் வாய்த்தர்க்கம் – அடித்து நொருக்கப்பட்ட வீடு
யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று பிற்பகல் வன்முறை கும்பல் தாக்குதல் [...]